லுனுகம்வெஹர – பெரலிஹேல பகுதியில் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல்களினையடுத்து ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் தெபரவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியை சேர்ந்த 27 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
#துப்பாக்கிச்சூடு #பலி #firing
Add Comment