இலங்கை பிரதான செய்திகள்

யாழ். பண்ணை வீதியில் விபத்து – ஒருவர் பலி – இருவர் படுகாயம்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ். பண்ணை வீதியில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மண்டைதீவு சந்திக்கருகில் இன்று மாலை 5 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மூவரும் காரில் சாட்டிக் கடற்கரைக்குச் சென்று திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றது.

வேகக் கட்டுப்பாட்டையிழந்த கார், வீதியோரம் உள்ள கட்டைகளுடன் மோதுண்டு கடலுக்குள் பாய்ந்து விபத்துள்ளானது என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். சாரதி உள்பட இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

#யாழ்  #பண்ணைவீதி #விபத்து #jaffna #accident

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.