இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை


இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை என 10 வருட கால வெற்றியினை கொண்டாடும் இத்தருணத்தில் தைரியமாக குறிப்பிட முடியும். யுத்தத்தை வெற்றிக் கொள்ளும் விதமாகவே சர்வதேச போர் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட பிரபல்யமாக நாடுகளில் பின்பற்றப்பட்ட போர் சட்ட விதிமுறைகளை பின்பற்றியே யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது என மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்

அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து முப்படையினரின் சேவையினாலேயே நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு இராணுவத்தை விட்டுக்கொடுக்காமல் இனியாவது பெருமைப்படுத்த அரசாங்கம் பழகிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ஸ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

பல உயிரிழப்புக்களுடன் வெற்றிக் கொண்ட பயங்கரவாதம் 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் பிறிதொரு அடிப்படைவாத தீவிரவாதத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. சர்வதேசத்துடன் தொடர்புடைய தேசிய தீவிரவாதத்தின் தாக்குதலே அண்மையில் இடம்பெற்றுள்ளது.

விடுதலை புலிகளினால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலினால் கொல்லப்பட்ட உயிர்களை விட அதிகமான உயிரிழப்புக்கள் ஒரு தற்கொலை குண்டுதாரியினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது

நாட்டுக்காக போராடிய இராணுவத்தினர் தொடர்ந்தும் மதிக்கப்பட வேண்டும். அரசியல் கொள்கைகள் மாற்றமடையும் போது இராணுவத்தினரை ஒருபோதும் வேறுப்படுத்தி அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள கூடாது என மகிந்த ராஜபக்ஸ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

#இலங்கை#போர்குற்றங்கள்  #மகிந்தராஜபக்ஸ #இராணுவத்தினர் #srilanka #mahintharajapaksha #warcrimes

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • தமிழர்களின் சுதந்திர போராட்டத்தை பயங்கரவாதமாக பேரினவாத அரசு காட்டுகின்றது. தமிழர்களின் சிவ பூமியாகிய இலங்கையை பெளத்த சிங்கள நாடு என்று அழைக்கின்றது. கொடூர குற்றங்களை செய்துவிட்டு இலங்கையில் எவ்வித போர் குற்றங்களும் இடம் பெறவில்லை என்று கூறுகிறது. இப்படி பல பொய்களை உண்மைகள் போல் அடிக்கடி சொல்லி இறுதியில் அவற்றை உண்மையாக்கி விடுகிறார்கள். இதை மாற்றியமைக்க அவர்கள் பொய் சொன்னவுடன் பொய்களை நிரூபித்து உண்மைகளை தமிழர்கள் உலகறியச் செய்ய வேண்டும்.