இந்தியா பிரதான செய்திகள்

சூரத் நகரில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 மாணவர்கள் பலி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 18 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள பயிற்சி; வகுப்பில் இன்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் அதில் சிக்கி 18 மாணவர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பரவி வரும் தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு படையினர் போராடி வருகி்ன்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

#Surat #Fire #சூரத்   #மாணவர்கள் #குஜராத்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.