இலங்கை பிரதான செய்திகள்

வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை – கரைச்சி பிரதேச செயலகம் முன் போராட்டம்


கிளிநொச்சி கனகாம்பிகைக்ககுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கிளிநொச்சி கனகாம்பிகை;ககுளம் பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மாற்நுத்திறனாளியாகிய தனக்கு இதுவரை வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்து இன்று (39-05-2019) கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான தனக்கு இதுவரை வீட்டுத்திட்டத்தினை வழங்காது தமது பிரதேசத்தில் வசதி படைத்தவர்களுக்கும ;வெளிமாவட்டங்களில் வாழ்பவர்களும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

#வீட்டுத்திட்டம்  #கரைச்சி  #போராட்டம்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.