பிரதான செய்திகள் விளையாட்டு

12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது வெற்றியை இங்கிலாந்து பெற்றுள்ளது

12 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. இன்றையதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு செய்ததனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 311 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதனையடுத்து 312 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 104 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 12 ஆவது உலகக் கிண்ணத்தின் முதல் வெற்றியை பெற்ற அணியாக பதிவாகியுள்ளது

#உலகக் கிண்ண கிரிக்கெட்  #வெற்றி  #இங்கிலாந்து  #icc #worldcup

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.