பிரதான செய்திகள் விளையாட்டு

டோனி ராணுவ முத்திரை பதித்த கையுறையுடன் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஐ.சி.சியிடம் கோரிக்கை

ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கையுறையுடன் டோனி உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஐ.சி.சியிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியின் போது இந்திய அணியின் வீரரான டோனி ராணுவ முத்திரை பதித்த விக்கெட் கையுறையுடன் விளையாடியிருந்தார்.
இது தொடர்பில் அவருக்கு பாராட்டும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியிருந்த நிலையில் இந்திய ராணுவத்தில் கௌரவ பதவி வகிக்கும் டோனி துணை ராணுவ சிறப்பு படையினரின் தியாகத்தை குறிக்கும் அடையாளம்)என்ற முத்திரையை தனது கையுறையில் பதித்து இருந்தார்.

இதுபோன்ற முத்திரையை பயன்படுத்துவது ஆட்ட விதிமுறைக்கு புறம்பானது என்பதனால் அடுத்த போட்டிக்குள் டோனி அதனை அகற்ற வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையிலேயே மேற்படி கோரிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ளது.

#டோனி  #ராணுவ முத்திரை #கையுறை #ஐ.சி.சி,

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.