உலகம் பிரதான செய்திகள்

லண்டன் குடியிருப்பில் தீவிபத்து – 20 வீடுகள் சேதம்


லண்டனிலுள்ள குடியிருப்பொன்றில் பாரிய தீ விபத்தென்று ஏற்பட்டுள்ளது. கிழக்கு லண்டனின் பார்க்கிங் பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் குடியிருப்பில் இருந்த 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனைத் தொடர்ந்து 10 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 100 தீயணைப்பு வீரர்களும் ஒரு மணித்தியாலப் போராட்டத்திற்கு பின்னர் தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கோண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தீவிபத்தின் போது ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் புகையினால் மூச்சுத்திணறல் பாதிப்புக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரு வீட்டின் பல்கனியில் ஏற்பட்ட தீயானது ஏனைய வீடுகளுக்கும் பரவியிருக்கலாம் எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#லண்டன்  #குடியிருப்பில் #தீவிபத்து # வீடுகள் #சேதம் #Barking fire

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.