உலகம் பிரதான செய்திகள்

கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் – சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

கொங்கோவைத் தொடர்ந்து உகண்டாவிலும் இபோலா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. உகண்டாவில் 5 வயதுச் சிறுவன் ஒருவன் இபோலா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் கடந்த 9ம் திகதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் தனது பெற்றோருடன் கொங்கோ எல்லை வழியாக பயணித்த நிலையிலேயே இதன் தாக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் உகண்டா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் கடந்த 10 மாதங்களில் 2000க்கும் அதிகமானோர் இபோலா தாக்கத்திற்குள்ளானதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மரணமடைந்ததுள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #கொங்கோ #உகண்டா #இபோலா #சிறுவன்  #உயிரிழப்பு

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers