உலகம் பிரதான செய்திகள்

லண்டன் மேயருக்கு எதிராக டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டு

லண்டன் நகரில் தொடரும் வன்முறைகள் தொடர்பில் லண்டன் மேயர் சாதிக்கான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார். லண்டன் நகரில் தொடர்ந்து கத்திக்குத்து சம்பவங்கள், வீதி வன்முறைகள் நடைபெற்று வருகின்றமை தொடர்பிலேயே டிரம்ப் தனது ருவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கடுமையாக குற்றம் சுமத்தியுள்ளார்
மேலும் டிரம்ப் தனது பதிவில் லண்டனுக்கு புதிய மேயர் வேண்டும் எனவும் சாதிக்கான் ஒரு அழிவு சக்தி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் லண்டன் மேயராக சாதிக்கான் நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் எனவும் அவர் லண்டன் நகரை அழித்து வருகிறார் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

#லண்டன் மேயர்  #சாதிக்கான் # டிரம்ப் #குற்றச்சாட்டு #கத்திக்குத்து

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.