உலகம் பிரதான செய்திகள்

சர்ச்சைக்குரிய குழாய்பதிப்பு திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல்

சர்ச்சைக்குரிய குழாய்பதிப்பு திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீதிமன்றம் ஒன்று கடந்த வருடம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

நேற்று செவ்வாய்க்கிழமை இந்த திட்டத்துக்கான மறு ஒப்புதலை வழங்கிய கனடா பிரதமர் ட்ரூடோ இந்த திட்டத்தின் மூலம் வரும் வருமானம் சூழலியல் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்படும் எனவும் அமெரிக்க சந்தையை கனடா நம்பியிருப்பது இந்த திட்டத்தால் குறையும் எனவும் ஜஸ்ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்துக்கு சூழலியளாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இவ்வாறு ஒhப்புதல் வழங்கியமையானது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு தேர்தல் சமயத்தில் பெரும் சவாலாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை ஏரிவாயு உற்பத்தியில் உலகளவில் கனடா ஐந்தாம் இடம் வகிக்கிறது. இந்த கச்சா எண்ணெய் குழாய்பதிப்பு திட்டமானது, எட்மாண்டன், அல்பெர்டா ஆகிய பகுதிகளிலிருந்து புர்னாபி, பிரிட்டிஷ் கொலம்பியா என பழங்குடி மக்கள் இருக்கும் பகுதி வரை கச்சா எண்ணெயை கொண்டு செல்லும்.

தற்போது 1,150 கிமீற்றர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழாய்பதிப்பு இரு மடங்கு தூரத்துக்கு விரிவாக்கம் செய்யப்படுவதுடன் அதன் கொள்ளளவு நாள் ஒன்றுக்கு 3 லட்சம் கொள்கலன்களில் ; இருந்து 890,000 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை இந்த திட்டத்துக்கு எதிராக போராடி வந்த கனடாவின் மேற்கு பகுதியில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த பழங்குடி மக்கள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர்.

#சர்ச்சைக்குரிய  #குழாய்பதிப்பு #கனடா  #ஒப்புதல்

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.