பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்து தென்னாபிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நேற்றையதினம் பேர்மிங்காமில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை நியூசிலாந்து அணி இறுதி ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதனால் போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதனால் விளையாட்டு 49-வது ஓவராக குறைக்கப்பட்டது.

இதனையடுத்து நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னபபிரிக்க அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 242 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்கள எடுத்து இ 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதேவேளை இன்று வியாழக்கிழமை நொட்டிங்காமில் நடைபெறவுள்ள 26-வது லீக் போட்டியில் 5 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியும் பங்களாதேஸ் அணியும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#நியூசிலாந்து  #தென்னாபிரிக்கா #விக்கெட்  #வென்றுள்ளது  #உலகக் கிண்ண

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.