நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் பயணகிக்க, நடிக்கத் தொடங்கி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் லக்ஷ்மன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் வைத்து தனது 16வது ஆண்டை கேக் வெட்டி நடிகர் ஜெயம் ரவி கொண்டாடினார்.
ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி, தற்போதைய தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் லக்ஷ்மன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கின்றார். இது ஜெயம் ரவியின் 25ஆவது திரைப்படமாக உருவாகிறது. இதில் லக்ஷ்மனும் ஜெயம் ரவியும் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக இணைகின்றமை விசேட அம்சமாகும்.
இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகியாக பொலிவுட் நடிகை நித்தி அகர்வால் நடிக்கின்றார். தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ், சரண்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

Add Comment