இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.மாநகர சபைக்கு புதிய உறுப்பினர்கள்…

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரு யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து சுய விருப்பின் பேரில் விலகியதை அடுத்து அக் கட்சியின் பரிந்துரையில் புதிய உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்,மாநகர சபைக்கு தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிகரன் ஆகிய இரு உறுப்பினர்களும் கடந்த மே மாதம் தமது உறுப்பினர் பதிவியை தமது சுயவிருப்பின் பேரில் ராஜினாமா செய்தனர்.

அவ்விரு வெற்றிடங்களுக்கும் அக்கட்சியின் சார்பில் டெய்சி பிலீப் ஜெயரஞ்சன் , தர்சிபா லவகீசன் ஆகியோரின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரைக்கப்பட்டதனை அடுத்து அவர்கள் இருவரின் பெயர்களும் வர்த்த மானியில் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபையின் அடுத்த அமர்வில் இரு உறுப்பினர்களும் சத்தியபிரமாணம் செய்து உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொள்வார்கள்.  #அகிலஇலங்கைதமிழ்காங்கிரஸ்  #யாழ்மாநகரசபை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap