கொள்ளுப்பிட்டிய விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 2 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து கொள்ளுப்பிடிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது கடனட்டை தயாரிக்கும் இயந்திரம், 5 வெற்று கடனட்டைகள்; மற்றும் மடிக்கணினி என்பனவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. #கொள்ளுப்பிட்டி #சீனர்கள் #போதைப்பொருள்தடுப்புபிரிவு
Add Comment