இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல். – வ.ஐ.ச.ஜெயபாலன்…

.
இது முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலம். முஸ்லிம்களின் நெருக்கடிகளில் கால் பகுதி தற்காலிகமான சலசலப்புகள். இன்னொரு கால் பகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. மிகுதி முஸ்லிம்களின் ஒருமித்த தேசிய நிலைபாட்டை அசாத்தியமாக்குவதில் ஊர்வாதத்த்தின் தொடர் வெற்றிகள் எனலாம். .
.
சலசப்புகளை புறக்கணிப்பதும் சலசலப்பின் பின்னே பாதகமாக நகர்த்தபடுகிற அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயல்படுவதும் முக்கியமானதாகும். ஆனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் வரலாற்று சிக்கல் முஸ்லிம்களின் தேசிய நலன்களையும் தமிழ் முஸ்லிம் உறவின் அடிப்படைகளையும் பின்தள்ளி முழு .இனத்தையே தோற்கடிக்கும் வகையில் ஊர்வாதம் பலபட்டு முன்நிலைப்படுவதாகும்.

முஸ்லிம்களின் உண்மையான சிக்கல் முஸ்லிம்களால் தேசிய நலன்களுக்கு ஊர் நலன்களை கீழ்படுத்தி செயல்பட முடியவில்லை என்பதாகும். உண்மையில் இது ஒரு அவல நிலையாகும். கல்முனைக்குடி ஊர் சமூகத் தலைமை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக பிரச்சினையையும் சாய்ந்த மருதுது பிரதேச சபை பிரச்சினையையும் கையாளபடும் விதம் இதற்க்கு நல்ல உதாரணமாகும்.
.
அடிப்படை பிரச்சினைகளை இனங்களுக்கு இடையிலான நல்லுறவு கோரிக்கைகளை தேசிய பிரச்சினைகளை கையாளுவதில் ஏனைய இனங்களோடு ஒப்பிடும்போது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒரு தடை உள்ளது. முஸ்லிம்களின் தேசிய பிரச்சினைகளுக்கு ஊர்மட்ட மாவட்ட மட்ட பிரச்சினைகளை கீழ்படுத்தும் அரசியல் பொறிமுறை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட வில்லை. அதற்க்கு முஸ்லிம்களின் சிதறிய புவியியல் இருப்பும் ஒரு காரணமென்றாலும் மலையக தங்கள் மக்கள் சிதறிய புவியியல் இருப்பை மீறி இன ஐக்கிய அரசியலை உருவாக்கி உள்ளனர். தமிழ் பேசும் மக்களுடனான நல்லுறவை முன்னிலைபடுத்தி அரசியல் செய்தமை மலையக மக்களது வெற்றிக்குப் பெரிதும் உதவியுள்ளது. எத்தனை சிக்களின் மத்தியிலும் தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மண்மட்டுமே தமிழருக்கு மட்டுமன்றி முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பான மண்ணாக இருப்பதற்க்கு தமிழ் கூறும் நல்லுலகமாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடருவதுதானே காரணம். கடந்த 30 வருடங்களாக கல்முனை சிக்கலை ஒட்டுமொத்த முஸ்லிம்களதும் தமிழரதும் நலன்களின் அடிப்படையில் விட்டுக்கொடுப்புகளோடு பேசி தீர்க்க முடியாத சிக்கலாக வளர்த்துவிட்டது எது?

.

ஊர்வாதத்தை மீறிய ஒட்டுமொத்த முஸ்லிம் இன நிலைபாட்டை உருவாக்க இயலாமை ஒரு இனத்தின் ஆபத்தான கையறு நிலை சிக்கலாகும். ஊர்வாதம் சந்தர்ப வாதமாகும். ஊர்வாதத்தை முறியடிக்க முடியாத சூழல் பெரும்பாலானவர்களின் சரணாகதி அரசியலுக்கும் விடுபட்ட தனி மனித குழுக்களின் பயங்கரவாதத்துக்கும் வழிவகுக்கும் சூழலாகும். முஸ்லிம் களின் ஒட்டுமொத்த தேசிய நலன்கள் அடிப்படையான சிந்தனை செயல்பாடுகளுக்கு ஊர்வாதத்தை கீழ்ப்படுத்தும் பொறிமுறையை உருவாக்காமல் முஸ்லிம்களுக்கு எதிர்காலமில்லை.
,
தமிழர்களின் தேசிய சர்வதேசிய அரசியலின் பலமே தமிழ் தேசிய நலன்களுக்கு முன் சகல ஊர் மட்ட பிரச்சினைகள் பிரமுகர்களும் கீழ்படுத்தப் பட்டிருப்பதுதான். முஸ்லிம்கள் இனியாவது இளைஞர்களாவது ஊர்களை தாண்டி தேசிய நிலைபாட்டை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.  #கல்முனைவடக்குதமிழ்பிரதேசசெயலகம்,  #சாய்ந்தமருதுதுபிரதேசசபை #முஸ்லிம்கள்
.
வேறு மார்க்கமில்லை.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap