சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து அங்கு ஓய்வு எடுத்துவரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் சந்தித்துப் பேசியுள்ளார்.
சிகிச்சை தொடர்பாகவும் உடல் நலம் குறித்தும் விபரங்களை கேட்டறிந்த அவர் இதர பொது விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொழும்பில் இருந்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிங்கப்பூர் சென்று நேற்று கோத்தபாய ராஜபக்ஸவை சந்தித்துள்ளனர்.
நாட்டுக்கான தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இதன்போது கோத்தபாய ராஜபக்ஸ அவர்களிடம் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சையின் பின்னர் ஓய்வெடுத்துவரும் கோத்தபாய ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடுதிரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #கோத்தாபய #சிங்கப்பூர் #அமைச்சர்
Add Comment