பிரதான செய்திகள் விளையாட்டு

இந்தியா -நியூஸிலாந்துக்கிடையிலான அரையிறுதிப் போட்டி இன்று தொடரவுள்ளது


மழை காரணமாக தடைப்பட்ட இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று 10ஆம் திகதி தொடரவுள்ளது. உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதும் முதலாவது அரையிறுதிப் போட்டி மழை காரணமாக நேற்று தடைப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மழை காரணமாக போட்டியை நிறுத்தி வைப்பதற்கு நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டது. இந்தநிலையில் கைவிடப்பட்டதிலிருந்து நேற்றைய போட்டி இன்று தொடரவுள்ளது.

அதனடிப்படையில் மீதமுள்ள 3.5 ஓவர்களை நியூஸிலாந்து இன்று எதிர்கொள்ளவுள்ளதுடன், இதனையடுத்தே இந்தியா களமிறங்கவுள்ளது. மழை காரணமாக இன்றைய ஆட்டமும் தடைப்படுமாயின், இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. #இந்தியா  #நியூஸிலாந்து #அரையிறுதிப் போட்டி

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.