உலகம் பிரதான செய்திகள்

வெனிசூலாவின் 18 மாகாணங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிப்பு


வெனிசூலாவில் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முற்றிலுமாக மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கின்ற நிலையில் அங்கு பொருளாதார நெருக்கடியும் நிலவுவதனால் மின்சார நிறுவனம் நஸ்;டத்தில இயங்குவதனால் அங்கு அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

இந்த நிலையில், நாட்டில் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த மார்ச் மாதம் அங்குள்ள 22 மாகாணங்களில் சுமார் ஒருவாரத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . #வெனிசூலா # மின்சாரம்  #துண்டிப்பு #venezuela

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.