இலங்கை பிரதான செய்திகள்

கொடிகாமத்தில் 31 கிலோ கஞ்சா மீட்பு


கொடிகாமம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கச்சாய் வீதியில் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 31 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் இவற்றை கைப்பற்றி கொடிகாமம் காவல்துறையி;டம் ஒப்படைத்ததாக கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

எனினும் சந்தேக நபர் குறித்த பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 60 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின்’ ஏ’ அறிக்கை மூலம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது #கொடிகாமம்  #கஞ்சா #மீட்பு
-மயூரப்பரியன்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.