முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிய நால்வர் மீது இராணுவப் படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த நால்வரில் மூவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவரை நோக்கி 15 தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் அவர் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் வாகன சாரதியை சிறைபிடித்த இராணுவத்தினர், இராணுவத் துப்பாக்கியால் அடித்து அவரை காயப்படுத்தியுள்ளனர்.
அம்பகாமம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடத்து, குறித்த இடத்திற்கு மக்கள் சென்றுள்ளதோடு, காவற்துறையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும் மக்களின் பிரசன்னத்தையடுத்து இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினரிடம் இராணுவத்தினரை கைது செய்யுமாறு மக்கள் கோரியபோதும் காவற்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
Add Comment