பிரதான செய்திகள் விளையாட்டு

தனஞ்சய டெஸ்ட் அரங்கில் நான்காவது 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய டெஸ்ட் அரங்கில் நான்காவது 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.  காலி சர்வதேச மைதானத்தில நேற்றையதினம்; நியூசிலாந்திற்கு எதிராக ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் இந்த மைல் கல்லை எட்டியுள்ளார்.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி 68 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக முதல் நாள் போட்டி முடிவுக்குக் கொண்டு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்தநிலையி; அகில தனஞ்சய 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தமை டெஸ்ட் அரங்கில் அவர் 5 விக்கெட் பெறுதியை பதிவு செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. #தனஞ்சய  #டெஸ்ட்  #விக்கெட்டுக்களை #இலங்கை

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.