Home இலங்கை கொழும்பில் பாதாள உலக குழு உறுப்பினர் உட்பட இருவர் வெட்டிக் கொலை

கொழும்பில் பாதாள உலக குழு உறுப்பினர் உட்பட இருவர் வெட்டிக் கொலை

by admin

கொழும்பு, கிரான்ட்பாஸ் மாதம்பிட்டிய பொது மயானத்துக்கு அருகில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மாலை இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு முச்சக்கர வண்டியில் வந்த நால்வர் மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த இருவரை கத்திகளால் தாக்கி கொலை செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன் போது பாதாள உலக குழு உறுப்பினரான 39 வயதான ஆனமாலு ரங்க மற்றும் 22 வயதுடைய இளைஞன் ஒருவாத் ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்த, குறித்த பகுதியில் தேடுதல மேற்கொள்ளப்படுவதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.  #கொழும்பு  # பாதாள உலக குழு #வெட்டிக்கொலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More