உலகம் பிரதான செய்திகள்

சிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்..

சிரியாவின் இத்லீப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சிரியாவில் 8 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகின்ற நிலையில் அரச படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். அதேவேளை கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த பெரும்பாலான நகரங்களை ரஸ்யாவின் உதவியோடு அரச படைகள் மீட்டுவிட்ட போதும் இத்லீப், வடக்கு ஹமா மற்றும் அலெப்போ மாகாணங்கள் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளன.

அவற்றை மீட்பதற்கு அரச படை போராடி வருகின்ற நிலையில் இத்லீப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளதுடன் அதிலிருந்த விமானியை சிறைப்பிடித்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை சிரிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.