Home பிரதான செய்திகள் அஜந்த மெண்டிஸ் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்தும் ஓய்வு

அஜந்த மெண்டிஸ் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்தும் ஓய்வு

by admin


இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

34 வயதான அஜந்த மெண்டிஸ் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதுடன் 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் 39 இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கடந்த 2008 ஆம் ஆண்டு தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஜந்த மெண்டிஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதே அவரது இறுதி டெஸ்ட் போட்டியாகும்.  #அஜந்த மெண்டிஸ்  #ஓய்வு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More