அல்பேனியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல கட்டிடங்கள் சேதமாகியுள்ள நிலையில் அதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்பேனியா நாட்டின் துறைமுக நகரான டூயுரசில் நேற்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.05 மணிக்கு திடீரென 5.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகியிருந்த நிலையில் அதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #அல்பேனியா #நிலநடுக்கம்
Add Comment