இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

ஹட்டன்– கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம்

க.கிஷாந்தன்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

08.10.2019 அன்று மதியம் முதல் பெய்த பலத்த மழை காரணமாக இந்த நிலம் தாழிறக்கம்  ஏற்பட்டுள்ளது.

வட்டவளை காவல் நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட இந்த தாழிறக்கம் காரணமாக  ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்க கூடியதாக உள்ளது.

பள்ளமான பகுதியில் வீதி கீழிறங்கியுள்ளதால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன.  #ஹட்டன்  #கொழும்பு #தாழிறக்கம்

 

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap