மன்னார் மறைமாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை உள்ளிட்ட பல குருக்கள் மற்றும் கத்தோலிக்க அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Add Comment