உலகம் பிரதான செய்திகள்

கென்யாவில் வெள்ளம் – நிலச்சரிவுக்கு 34 பேர் பலி

கென்யாவில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்து வருகின்ற இந்த கனமழையால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையிலேயே இவ்வாறு 34 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கன மழையால் டக்மால் என்ற கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 17 போ் புதையுண்டுள்ளனர் எனவும் பல்வேறு கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி மேலும் 17 போ் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது   #கென்யா #வெள்ளம்  #நிலச்சரிவு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap