இலங்கை பிரதான செய்திகள்

பருத்தித்துறை புதிய சந்தையில் கடை ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது….

பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள பான்சி கடை ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அதனால் கடையிலிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான பான்சி பொருள்கள் மற்றும் பாதணிகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த நாசகாரச் செயல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது என்று சிசிரிவி காணொலியை அடிப்படையாக வைத்து காவற்துறையினர் குறிப்பிட்டனர். பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள சஜித் பான்சி அன்ட் சூ மார்ட் என்ற கடையே இவ்வாறு பெற்றோல் ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.

கடையின் கதவினை உடைத்து பெற்றோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. தீவைத்துவிட்டு ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சிசிரிவி கமராவில் பதிவாகி உள்ளது.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு பெற்றோல் கான்கள் மீட்கப்பட்டுள்ளன என காவற்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.