உலகம் பிரதான செய்திகள்

கொரோனா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்

BBC

கொரோனா வைரஸ் தொற்று ஒரு “முக்கிய கட்டத்தை” எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் பரவக்கூடிய நிலையுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்தார். உலக நாடுகள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க போராடி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இரண்டாவது நாளாக சீனாவுக்கு வெளியே அதிகப்படியான கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இரான் மற்றும் இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டிலிருந்து பயணம் செய்பவர்களாலும் இந்த தொற்று பரவி வருகிறது.

இரான் துணை சுகாதார அமைச்சர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES (Image captionதனக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தெரிவிக்கும்போதே உடல்நல குறைவுடன் காணப்பட்டார் இரானின் துணை சுகாதார அமைச்சர்)

இரானில் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரான் பெண்கள் மற்றும் குடும்ப நல விவகாரங்களின் தலைவர் மாசுமே எப்டெகாருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் சுமார் 50 நாடுகளில் 80,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2800 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதில் பலர் சீனாவின் ஹூபே மாகணத்தை சேர்ந்தவர்கள்.

பல நாடுகளில் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வர்த்தக போக்குவரத்து குறையலாம் என்ற அச்சத்தால் பங்குச் சந்தை மதிப்புகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. வியாழக்கிழமை நிலவரப்படி, சீனாவில், 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 433பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

என்ன சொல்கிறது உலக சுகாதார அமைப்பு?

கொரோனா தொற்று பரவாமல் இருக்க அரசுகள் திறன்பட செயல்பட வேண்டும் என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்த தொற்றை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதை பொறுத்து இது எந்த பாதையிலும் செல்லலாம் என அவர் தெரிவித்துள்ளார். ‘அச்சம் கொள்வதற்கான நேரம் இதுவல்ல. தொற்றை தடுத்து உயிர்களை காக்க வேண்டிய நேரம் இது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஹாங்காங்கில் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஜப்பான் மற்றும் இராக்கிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

உலக நாடுகளில் என்ன நிலை?

 • வெளிநாட்டு யாத்ரீகர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை செளதி அரேபியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஜூலை மாதம் தொடங்கும் ஹஜ் புனித யாத்திரை பாதிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
 • இரான் மக்கள் தேவையில்லாத பயணங்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் மேலும் டெஹரான் மற்றும் பிற நகரங்களில் வெள்ளிக்கிழமை வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
 • சீனாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடை அந்நாட்டு நீட்டித்துள்ளது.
 • இத்தாலியில் இதுவரை 17 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 11 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
 • கிரீஸில் அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 • ஜப்பானில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது 13 மில்லியன் குழந்தைகளை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே மார்ச் முதல் வாரங்களில் இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என தெரிவித்தார்.
 • சீனாவில் சுமார் 200 மில்லியன் மாணவர்களை இணையத்தின் மூலம் பாடம் பயில அரசு அறிவித்துள்ளது.
 • இரானில் இதுவரை 245 கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
 • இரானின் அண்டை நாடுகள் தங்களின் எல்லையை மூடியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹரைன், லெபனான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளில் இரானிலிருந்து வருபவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 • தென் கொரியாவில் இதுவரை 1262 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
 • சிங்கப்பூரில் 12 வயது மாணவர் ஒருவர் உட்பட 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 • ஐரோப்பாவில், இத்தாலியில் இதுவரை 650 பேருக்கு தொற்று இருப்பதாக கண்டியறியப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
 • மேலும் அல்ஜீரியா, டென்மார்க், ரோமானியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் இத்தாலிக்கு பயன் செய்தவர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 • பிரான்ஸில் இதுவரை 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.
 • பிரிட்டனில் மொத்தம் 16 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 • நெதர்லாந்திலும் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்நபர் சமீபமாக இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
 • அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஒருவருக்கு வைரஸ் தொற்று எவ்வாறு வந்தது என்பது தெரியவில்லை என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் சமீபத்தில் எங்கும் பயணம் மேற்கொள்ளவும் இல்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலும் இல்லை என்கின்றனர் அதிகாரிகள்.  #கொரோனா #உலகசுகாதாரநிறுவனம்  #டெட்ரோஸ் #சீனா

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.