கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் யாப்பின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், உயர்பீட உறுப்பினர் பதவிலிருந்தும் இடைநிறுத்தியுள்ளார்.
கட்சியின் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு மாற்றமாக அவரது நடவடிக்கை அமைந்துள்ளதால் இதுகுறித்து அவரிடம் விளக்கம் கோரப்படுவதுடன், ஏனைய ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார். #ஷாபிரஹீம் #ரவூப்ஹக்கீம் #ஸ்ரீலங்காமுஸ்லிம்காங்கிரஸ்
Spread the love
Add Comment