இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

உள்ளூர் அறிவு உற்பத்திகளின் தேவைப்பாடு – கொரோனா புலப்படுத்தும் செய்தி – இ.குகநாதன்…

கண்ணுக்கு புலப்படா நுண்ணுயிர்களுடன் உலகம் யுத்தம் செய்து மனித உயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு வியூகங்கள் வகுத்து மிகத்தீவிரமாக செயற்பட்டு நடைமுறைப்படுத்தும் சமகால சூழலில் உள்ளூர் அறிவின் மீளுருவாக்கம் சார்ந்து அனைவரும் திரும்பி பார்த்து சிந்தித்துக் கொண்டிருக்கும் பேசு பொருள் பொதுவெளி உரையாடலில் செயல்முறைரீதியாக சகல மட்டங்களிலும் மீண்டும் இதனை கொண்டு வருதலென்பது கொரானா கற்றுத்தந்த பாடமாகும்.

முன்னோர்கள் எதிர்கால தேவைகருதி சமூக நன்மைக்காக உருவாக்கிய உள்ளூர் விவசாயம் பொருளாதாரம்ரூபவ் வைத்தியம்கல்வி அனைத்தும் கைதவறி போனவையாக நகரமயமாக்கத்தின் ஆதிக்கத்தில் உள்ளூர் அறிவினை அடக்கியாழும் முனைப்புக்கள் மேற்கொண்டு இயந்திரமயமாக்கப்பட்ட முதலாளித்துவ சிந்தனைகளும் கொள்கைகளும் பரப்பப்பட்டு மக்களை நுகர்வுச் சமூகமாக மாற்றி அனைத்துக்கும் வல்லரசுகளை கையேந்தும் நிலமைக்கு ஆக்கி விட்டது. ஒரு வல்லரசு நாட்டில் ஏற்பட்ட கண் தெரியா நுண்ணுயிர் உலகில் 95 வீதத்திற்கு மேற்பட்ட நாடுகளுக்கு பரவுகின்றது எனின் அவ்வல்லரசு நாடு எவ்வாறு உலக நாடுகளை தனது காலனித்துவ ஆகிக்கத்தின் கீழ் வர்த்தக தொடர்பினை கொண்டிருக்கின்றது அல்லது அன்நாட்டில் தங்கியதாய் ஏனைய நாடுகள் எவ்வாறு காணப்படுகின்றன என்று பார்க்க வேண்டிய தேவையும் உள்ளது. அத்துடன் மனிதர்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் உலகம் முழுவதும் பிரயாணங்களை மேற்கொண்டு வலைப்பின்னலாய் அலைகின்றனர். இவை அவசியமானதா இதன் சாதக பாதகங்களை ஆராய வேண்டியும் உள்ளது.

இன்நிலையில் சுய சார்பான உள்ளூர் வாழ்வியலை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மனிதர்களுக்கு மருத்துவங்களாகவும் உணவாகவும்ரூபவ் கிருமி எதிர்ப்பு சக்தியாகவும் காணப்பட்ட தாவரங்களையும்மூலிகைகளையும் அழித்து அபிவிருத்தி என்ற நிலையில் றோடுகளும் பாலங்களும் வீடுகளும்பெரும் கட்டிடங்களும் கட்டிய சூழல் பார்வையில் முன்னவர் வீட்டின் வேலிகளாக உருவாக்கிய ஆமணக்கு கிளிசறியாரூபவ் கிளுவைபூவரசை போன்றனவும் வீட்டின் வளவினுள் நாட்டிய வேப்பைகாட்டுத்தேங்காய்முதிரைரூபவ் இலுப்பை திருக்கொன்றை அதுபோல காஞ்சிரை ஆத்திநறுவிணியை மஞ்சவணா இத்தி வில்வை போன்றவையெல்லாம் நோய் எதிர்ப்பு தாவரங்களாகவும்ரூபவ் மருத்துவ குணம் உள்ளவையாகவும் பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைய இளம் சமூகத்திற்கு இவ்வாறான தாவரங்களை அறியாதவர்களாக ஆக்கியிருப்பதென்பது கவனித்தலுக்குரியவை. இவையோடு இணைத்து முடிதும்பைமிளகு துளசிமுடக்கத்தான் வாதமடங்கிசீதேவி செங்களனீர் தீக்குறிஞ்சி பவளமல்லிகை கொடிக்கள்ளிகற்பூரவள்ளி கீழ்காய் நெல்லிவேலிப்பருத்திரூபவ் லெச்சகட்டை குப்பை மேனி கற்றாளை ஆடாதோடை முடக்கத்தான் நாயுருவி நன்னாரி ஊமத்தை போன்ற பல மூலிகைத் தாவரங்களையும் குறிப்பிடலாம்.

ஊரடங்கு சட்டமுறை அனைவரையும் வீடுகளிற்கு முடக்கி இருக்கின்ற நிலையில் அது தளர்த்தப்படும் குறுகிய கால நேரத்தில் பொருட்களுக்காக அடித்து பதைத்து முண்டியடித்து அரசினால் விடுக்கப்படும் நோய் பரவும் விதிமுறையை மறந்து நுகர்வாளர்களாய் உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் நிலை உருவாகின்றது. தொடர்ச்சியாக இன்னிலை எழுமெனின் இறக்குமதி பொருட்களுக்கான நிலைமை என்ன என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது. இந்த இடத்தில் வீடுகளில் செய்யும் விவசாயம் பற்றி சிந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. வீடுகளிலே வளர்க்கப்பட்ட தூதுவிளா முருங்கைபொன்னாங்கண்னிரூபவ் வல்லாரை முல்லை முசுற்றை கீரை குறிஞ்சா அகத்தி வாதமடங்கி என நீண்டு செல்லும் இலைக்கறி வகைகள் நினைவுக்கு வருகின்றன. எங்கோ உருவான கொரானா இது பற்றி சிந்திக்க வைக்கும் அளவிற்கு எமது உள்ளூர் அறிவை தொலைத்தவர்களாக மாறிய அபத்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமெனின் கொவிட் மனிதர்களை பாதிக்காது என வைத்தியர்கள் கூறுமிடத்து நோய் எதிர்ப்பு உள்ளூர் உணவுமுறைகளில் உள்ளது என்ற தீர்மானத்தில் பெருங்காயம்ரூபவ் மஞ்சள்ரூபவ் பூடு இஞ்சி கொத்தமல்லி போன்றவற்றிக்கு பிறநாடுகளில் இருந்து இறக்குமதி வரும்வரை அதனை எதிர்பார்த்தவர்களாய் நிற்கின்றமை அவதானித்தலுக்குரியவை. இவை உணவுகளில் மட்டுமன்றி தாவரங்கள் வாழ்வியலில் நாளந்தம் செய்யும் வேலைகள் (துலாந்தில் இருந்து தண்ணி அள்ளுதல்உரலில் நெல்லுக்குற்றுதல்…) சடங்குகள் கலைசார் நிகழ்வுகள் என பலவற்றில் இதன் கூறுகளை கண்டுகொள்ள முடியும்.

இன்நிலையில் ஏலவே உள்ளூர் அறிவியல் சார்ந்து அதன் நடைமுறைகளை தற்காலத்தில் பலர் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலும் அதனை நவீன சிந்தனையில் மேற்கட்டுமானம் கீழ்கட்டுமானம் என்ற கருத்தியலில் அவை சமகாலத்திற்கு ஒவ்வானவை அல்ல என்ற புரிதலில் முறையற்ற விமர்சனங்களை செய்து புறக்கணித்த நிலையும் அண்மைக்காலமாக பல பொது நல கொள்கையாளர்களிடம் காணப்பட்டன. இதனை இவ்விடத்தில் நினைவுபடுத்தல் அவசியம்.

உள்ளூர் அறிவு என்பது உள்ளூர்களுக்கு உரியவை அதற்குள் மட்டும் முடங்கி இருப்பது என்றல்ல இவை உலகம் முழுவதும் வியாபித்து காணப்படுகின்றது. நாங்களும் அனுபவத்து பிறருக்கும் கொடுத்தல். நவீன சிந்தனை கொள்கைகள் உள்ளூர் அறிவை விஞ்ஞான பூர்வமற்றதுரூபவ் பாமரத்தன்மையானது என எதுவித ஆய்வுகளும்  புரிதலுகளுமின்றி நிராகரித்தல் என்பது நகைப்புக்குரியவை.

இதேவேளை உள்ளூர் அறிவையும் பொருளாதார முறைமைகளையும் பேணி பாதுகாத்து நடைமுறைப்படுத்தும் அரச கொள்கை என்ன என்ற கேள்வியும் உருவாகின்றது. திறந்த பொருளாதார கொள்கைகள் உள்ளூர் உற்பத்தி பொருளாதார முறைமையை அழித்த விதம் சார்ந்தும் உள்ளார்ந்து ஆராய வேண்டிய தேவையையும் காலம் உணர்த்தியுள்ளது. உள்ளூர் அறிவை பாதுகாத்தலுக்காக அரசிடம் சமூக உரிமைகள் வழமைச் சட்டம் உள்ளது என்று சிலர் கூறுகின்ற போதும் எழுதப்படாத வழமைச்சட்டத்தால் அதிக சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாக செயற்பட முடிவதில்லை பாரம்பரிய அறிவு பொது மக்கள் சொத்து. அதை பயன்படுத்த பாதுகாக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்ற கருத்தால் அவை அதிகம் முடக்கப்படுகின்றது. இதனை காரணம் காட்டி அரசு விடுபட்டுக் கொள்ள முடியாது. ஆகவே சமூக அறிவு சொத்து உரிமைகள் சமூகத்தை அடித்தளமாக கொண்ட அறிவுச் சொத்து உரிமை பாரம்பரிய வள உரிமைகள் இயற்றப்பட்டு வலுவான இயங்கியல் தன்மையுடன் அவை நடை முறைப்படுத்த வேண்டும்.

உள்ளூர் அறிவு சார்ந்து வெகுஐன மயப்படுத்தலில் அரச அரசசார்பற்ற மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ளுதல் தற்கால தேவையாகவும் உள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்கள் இம்முயற்சியை முன்னெடுத்தல் அவசியம். அதாவது இவ்விடயங்களை மாணவர்களுக்கான கற்றல் மையங்களாக மாற்றி அதுசார்ந்தும் செயற்படுதல் என்பதும் அவசியம். மாறாக உள்ளூர் அறிவின் புலமையாளர்களான மருத்துவிச்சிகள் மற்றும் அண்ணாவிமார்களை மாணவர்களுக்கு பல்கலைக்கழங்களுக்கு வருவித்து கற்பித்தல் செய்தலுக்கும் அவர்களின் அனுபவங்களை பகிர்தலுக்கு இடமளிக்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மருத்துவிச்சிகள் கற்பிப்பதா? என்ற விதண்டாவாத விமர்சனங்களை செய்யும் கல்வியலாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பாமரர் படிக்காதவர்கள் என்று சொல்லும் மேற்கூறியோரிடத்தில் எவ்வாறு இவ்வறிவு வருகிறது. எனவே பாமரம் படிப்பு என்பது எது? இதன் அளவுகோல் எதனால் நிர்ணயிக்கப்படுகின்றது என்றெல்லாம் ஆராயவேண்டியுள்ளது. எதிர்வினைகளின்று ஒருமித்து சமூகம் சார்ந்தும் சிந்திக்க வேண்டிய தேவையும் ஏற்படுகின்றன. ஆகவே ஒட்டுமொத்த உலகம் எதிர் கொண்டுள்ள பாரிய சவாலான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் உள்ளூர் அறிவை பாதுகாத்தல் நடைமுறைப்படுத்தல் நம் அனைவரின் கடமையாகும்.

பட்டறிவு இதனை உணர்த்தியுள்ளது. இன்நிலை உணர்ந்தவர்களாய் தற்போது வீடுகளுக்குள் முடங்கி ஓய்வு கிடைத்துள்ள சூழலில் குடும்ப உறுப்பினர்களுடன் ஆற அமர்ந்து பேசுவதற்கும்ரூபவ் உள்ளூர் பயிர்கள் தாவரங்கள் நட்டு அதனை பராமரிப்பதற்கான நேரத்தை ஒதுக்குதல் போன்றனவற்றை செய்யுமிடத்து எதிர்கால சவால்களில் இருந்து விடுபடுவதற்கான சந்தர்ப்பத்தினை உருவாக்கியும் கொவிட் வைரஸ் பரவலுக்கு அரசு செய்யும் செயற்றிட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் முடியும். உள்ளூர் அறிவென்பது முன்னோர்கள் சமூகத்தேவை கருதி கையளித்தவை இதனை அனுபவித்தல் மட்டுமல்ல அடுத்தடுத்த சமூகத்தின் தலைமுறையினருக்கு கையளித்தல் நம் அனைவரின் கடமையாகும்.

இ.குகநாதன்

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap