உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 1200 பேர் உயிரிழப்பு  


அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1200 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை  9,618 ஆக உள்ளது.

உலகிலேயே கொரோனா வைரசால் அமெரிக்காவில் தான் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி வருகிறது. குறிப்பாக நியூயோர்க் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நான்காயிரத்தை எட்டியதுள்ளதுடன் நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1½ லட்சத்தை நெருங்கியுள்ளது

இதேபோல் நியூஜெர்சி, மிச்சிகன், கலிபோர்னியா, லூசியானா, புளோரிடா, மசாசுசெட்ஸ், பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களிலும்; 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நியூயோர்க்கில் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை முதன்முறையாகக் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   #அமெரிக்கா #உயிரிழப்பு   #நியூயோர்க் #கொரோனா

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.