தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 31 பேர் உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1175 ஆக உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் இரண்டு பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு வயதுடைய குழந்தையும் அடங்கும்.
பெற்றோர்களிடமிருந்து அவர்களது குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் 10 வயதுக்குட்பட்ட 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று தெரிவித்துள்ளார்.
வயதானவர்களையும், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்களையும் மட்டுமே இந்த வைரஸ் தொற்று அதிகமாகத் தாக்கும் என்று சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் இத்தனை குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே ஈரோட்டில் பெண் மருத்துவரிடமிருந்து 10 மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று பரவியது. சிகிச்சைக்குப் பிறகு அக்குழந்தை முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.#தமிழகத்தில் #குழந்தைகளுக்கு #கொரோனா
Add Comment