எந் நாளும் ஓர் நாள் தான்
அதை உணர்த்த வந்தது
சார்வாதி புது நாள் தான்.
பஞ்சாங்கங்களை மறுக்கவில்லை
பஞ்சாங்கம் வர முன் வாழ்ந்தவர்களை
மறக்கவுமில்லை.
புத்தாடை அணியாமல்
ஸ்தம்பிக்கவில்லை புது வருடம்
விலைக்கழிவு போட்டு ஏமாற்ற
வரவில்லை துணிக்கடையும்
பட்டாசு சத்தம் தான்
புது வருட சந்தோசம்
இப்போது புரிந்திருக்கும்
செலவழிச்சது தான் மிச்சம்
எதிர் வீட்டு இனிப்புண்ண
போகாத குறையன்றி
நகர்ந்தது இந் நாளும்
எந் நாளும் ஓர் நாள்தான்.
ஊரடங்கு போட்டாலும்
ஒரு கையில் அடங்காத
வெய்யவனும்
நகர்த்திவிட்டான் நந்நாளை.
நேரான வழி கொண்டு
நிறைவான மனம் கொண்டு
நகரும் மனிதருக்கு
எந் நாளும் திரு நாள் தான்.
த.நிறோஜன்.
கிழக்குப் பல்கலைக்கழகம்,
இலங்கை.
Spread the love
Add Comment