Home இலங்கை உதயன் பத்திரிகை பணியாளர்கள் படுகொலை நினைவு நாள்…

உதயன் பத்திரிகை பணியாளர்கள் படுகொலை நினைவு நாள்…

by admin

உதயன் பத்திரிகை நிறுவனத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் படுகொலையான ஊடக பணியாளர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

உதயன் பத்திரிக்கை நிறுவனத்தில் கொல்லப்பட்ட ஊடக பணியாளர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை மாலை 6.10 மணிக்கு நடைபெற்றது. அதன் போது அவர்களது திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செளுத்தப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள ‘உதயன்’ பத்திரிகை நிறுவனத்தினுள் அத்து மீறி நுழைந்த ஆயுத தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரு ஊடக பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படாமல் இன்று வரை அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கிடப்பிலையே போடப்பட்டு உள்ளன.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.