Home இலங்கை இலவசக்கல்வி சமத்துவத்துக்கானது – இடர்க்காலங்களில் சமத்துவத்துக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்…

இலவசக்கல்வி சமத்துவத்துக்கானது – இடர்க்காலங்களில் சமத்துவத்துக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்…

by admin

03 மே 2020

மூன்றாவது கண் உள்ள10ர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டம் மற்றும் சமதை பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் இணைந்து வழங்கும் அறிக்கை.

இலவசக் கல்விக்கொள்கை தொடர்பில் முன்னோடியான நாடுகளுள் இலங்கையும் ஒன்றாகும். இக் கல்விக்கொள்கையானது இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் வர்க்க, சாதி, இன, பிரதேச, பால்நிலை போன்ற வேறுபாடுகளின்றி ஒரேவிதமான கல்வியை அடைய வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டது. சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 75 வருடங்களாக பலவிதமான மாற்றங்கள் ஊடாக மேம்படுத்தப்பட்டு வருவது. ஆயினும் இலவசக்கல்வியை முழுமையாகப் பயன்படுத்துவதில் பிள்ளைகள் அவரவரது பின்னணிகளின் அடிப்படையில் பாகுபாடுகளை அனுபவித்து வருவதும் உண்மையே. இந்நிலையில் உலகளாவிய ரீதியில் பிரச்சனையாகியுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக இலங்கையிலும் மக்களின் சாதாரண வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தந்த வருடத்துக்குரிய பாடத்திட்டங்களை தகவல்தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி நடாத்தும் முன்னெடுப்புக்களையும், கேள்வித்தாள்களை பிரதியெடுத்து மாணவர்களுக்கு கொடுப்பதையும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளும் பல தனியார் வகுப்பு ஆசிரியர்களும் ஆரம்பித்துள்ளனர்.
மாணவர்;களின் கல்வி மற்றும் எதிர்காலம் என்பன முக்கியம் என்றாலும் இத்தகைய சூழலி;ல் கல்வி எவ்வாறாக அமைய வேண்டும் என்பது பற்றியும் அதில் சமத்துவத்தை பேணுதல் பற்றியும் நாங்கள் அதீத கவனம் எடுக்க வேண்டும்.
அனைத்துப்பிள்ளைகளிற்கும் தேவையான கற்றல் எது என்பது பற்றியும் சமத்துவக் கல்வி சார்ந்தும் அனைவரும் கவனத்திற்கு எடுக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
1. நாளாந்த வாழ்வை நீண்ட நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கக் கூடிய கொரோனா தொற்றுப் போன்ற பேரிடர்களை புரிதலுக்குரிய கல்வி பிள்ளைகளுக்கு அவசியம். .
2. இணையத்தின் ஊடான கற்றலானது பணக்கார, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களையே இலக்காகக் கொண்டு அமைகின்றது. வசதிவாய்ப்புக்கள் கிடைக்காத பின்னணிகளில் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் (சமுர்த்திப் பயனாளிகள், வறியவர்கள், ஸமார்ட்போன் வசதியில்லாதவர்கள், கணனி மற்றும் இணையத் தொடர்பு இல்லாதவர்கள்) இந்த வாய்ப்பை அடைய முடியாது.
3. இணையத் தொடர்புகளுக்கான செலவை குடும்பத்தவர்களிடம் எதிர்பார்ப்பது இலவசக்கல்விக்கு மாற்றானது.
4. வீட்டிலிருந்து கற்பதற்கான சூழல் அனைத்து குடும்பங்களிலும் இருப்பதில்லை. நாளாந்த உணவுக்கான பிரச்சனைகள், வறுமை, பசி – பட்டினி, குடும்பவன்முறைகள் நிலவும் வீடுகள் பிள்ளைகளின் கற்றலுக்கு ஏற்றவையல்ல.
5. மேலும் ஆசிரியரது உதவியில்லாது இந்தப் பாடத்திட்டங்களை கற்பதில் மாணவர்களுக்கு சிரமம். ஏற்படும் போது அவர்களுக்கு உதவக்கூடிய தகைமையுடன் அனைத்து பெற்றோரும் இருப்பதில்லை.
6. பிள்ளைகளது படிப்பு சார்ந்த விடயங்களில் பொறுப்பும் சுமையும் பெரும்பாலும் தாய்மாரிலே சுமத்தப்படுகின்றமை. இந்தச்சூழலில் அவர்கள் மீதான மேலதிக சுமையாக மாறியுள்ளதோடு பல பிள்ளைகள் காணப்படும் வீடுகளில் இந்நிலைமை இன்னமும் மோசமடைகிறது.

சமத்துவம் உரிமைகள் மற்றும் இலங்கையின் இலவசக்கல்வி நிலைத்திருத்தல் ஆகியவற்றில் அக்கறை கொண்டவர்கள் என்ற வகையிலும், பெற்றோர்களாகவும் சில பரிந்துரைகளை இங்கு முன்வைக்கின்றோம்.

1. கொரோனாப் பெருந்தொற்றுப் போன்ற விடயங்களையும் அவற்றை எதிர்கொள்வதற்குமான காலப்பகுதியில் கல்வி அல்லது அறிவு எத்தகையதாக இருக்கவேண்டும் என்பதைப்பற்றிய முற்தயாரிப்புக்களை மேற்கொள்ளல்.
2. ஓவ்வொரு பாடசாலையும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களதும் குடும்பச்சூழலை அடிப்படையாகக் கொண்டு அவர்களது உடல்உள நலம் மற்றும் உணவு கிடைத்தல் போன்ற விடயங்களைக் கையாள்வதற்கான திட்டத்தை தயாரிப்பதும், தேவையான விடயங்கள் அந்தத்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதற்கான இணைப்பாகம் செய்தலும்.
3. மாணவர்கள் அவரவரது வீடுகளில் குடும்பங்களுடன் இணைந்தவர்களாக, வாழ்க்கைக் கல்வியைக் கற்பதற்கான வழிநடத்தல்கைள வழங்குதல். உதாரணமாக வீட்டுத்தோட்டம் உருவாக்குதல், உணவு தயாரித்தல், சிறு பாவனைப்பொருட்களைத் தயாரித்தல், தாம் வாழும் சூழல்சார் தொழில்கள் தொடர்பில் அறிதலும் பயில்தலும் போன்றன. .
7. வழக்கமான பாடத்திட்டங்களைக் கற்பிக்க கூடிய சூழல் ஏற்படும் போது ஆரம்பகட்டமாக அனைத்து சுகாதார நடைமுறைகளடனும் சில மாணவர்களுக்கு மட்டுமான மட்டுப்படுத்தப்பட்ட வகுப்புக்களை ஆரம்பித்தல். இதற்கு வசதிவாய்ப்புக்கள் அற்ற மாணவர்கள், மெதுவாகக் கற்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கல். இந்தச் சந்தர்ப்பத்தில் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தக கூடிய ஏனைய மாணவர்களுக்கு இணையம் ஊடான கல்விக்குரிய விடயங்களை வழங்கலாம்.
8. முக்கியமாக எதிர்வரும் காலங்களும் இத்தகைய பேரிடர்களைக் கொண்டிருக்கலாம் என்பதால் அத்தகைய காலப்பகுதியை வல்லமையுடன் கடந்து வருவதற்குமான கல்வி எதுவாக இருக்கும் என்பதைப் பற்றிச் சிந்ததித்து நீண்டகால நோக்கில் ஆக்கபூர்வதாகத் திட்டமிடல்.

நன்றிகளுடன்;.

மூன்றாவது கண் உள்ள10ர் அறிவு திறன் செயற்பாட்டு நண்பர்கள் வட்டம்

07, தண்ணீர்க் கிணற்றடி வீதி,
பாலமீன்மடு,
மட்டக்களப்பு

077 1093731

[email protected]

சமதை பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளர்கள் குழு
திருவள்ளுவர் வீதி,
கொம்மாதுறை,
செங்கலடி,
மட்டக்களப்பு

077 5382119

[email protected]

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More