உலகம் பிரதான செய்திகள்

மலேரியா மருந்தினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு தடை


மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தினை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதை உலக சுகாதார அமைப்பு தடை செய்துள்ளது. பல நாடுகளில் நடைபெற்று வந்த மருத்துவ பரிசோதனை பாதுகாப்பினை கரு;திற கொண்டு அதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹைட்ராக்சி குளோரோகுயின் கோவிட் 19ஆல் உயிரிழக்கும் ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவ சோதனை ஒன்றில் தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப் கொரோனாவிலிருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த மருந்தை உட்கொள்வதாக தெரிவித்திருந்தார். பல மருத்துவ ஆலோசனைகளுக்கு பின்னரும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் மலேரியா சிகிச்சையில் வழங்கப்படும் இந்த மருந்துக்கு ஆதரவாக பேசி வந்தார்.

மேலும் இந்த மருந்தால் இதயத்திற்கு பிரச்சனைகள் வரலாம் என பொது சுகாதார அதிகாரிகளும் டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது #மலேரியா  #கொரோனா #தடை  #உலகசுகாதாரஅமைப்பு  #டிரம்ப்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.