பங்களாதேசின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மக்கள் தங்கியுள்ள ஒருமுகாமில் 71 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள காக்ஸ் பசார் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான இந்த முகாமில்; வாழ்ந்து வந்த அவர், மருத்துவ தொண்டு நிறுவனம் ஒன்றினால் இயக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல்மையத்தில் உயிரிழந்துள்ளார்.
உலகிலேயே அதிக அளவிலாக அகதிகள் வாழும் அந்த முகாமில் இதுவரை 29 ரோஹிஞ்சா அகதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு வெறும் 339 பரிசோதனைகள் மட்டுமே இதுவரை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #அகதிமுகாம் #கொரோனா #பங்களாதேஸ் #ரோஹிஞ்சா
Spread the love
Add Comment