இலங்கை பிரதான செய்திகள்

வி.எம்.எஸ் செயற்படாத மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்களிடம் சேவைக் கட்டணம் அறவிட வேண்டாம்.

வி.எம்.எஸ்(Vessel monitoring system) எனப்படும் ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கான அவதானிப்பு பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும்வி.எம்.எஸ் பொறிமுறையின் வினைத்திறனான செயற்பாடு உறுதிப்படுத்தப்படும்வரை அதற்கான சேவைக் கடடணம் அறவிடப்படுவதை இடை நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார். வி.எம்.எஸ் கருவிகளின் செயற்பாடு தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று(03.06.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சில் இடம்பெற்ற நிலையிலேயே குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச ஏற்றுமதி நியமங்களுக்கு அமைய கடற்றொழிலில் ஈடுபடுகின்ற ஆழ்கடல் மீன்பிடிப் பலநாள் கலங்களுக்கு கடற்றொழில் திணைக்களத்தினால் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் வி.எம்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில்இதுவரை நாடளாவிய ரீதியில் சுமார் 1500 ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களுக்கு குறித்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்காக மாதாந்த சேவைக் கட்டணமும் அறவிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்வி.எம்.எஸ் கருவிகளின் செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள்சுமார் 600 கலங்களில் மாத்திரமே குறித்த கருவி செற்படுவதாகவும் ஆனால் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான செயற்படாத கருவிகளுக்கும் மாதாந்த சேவைக் கட்டணம் அறவிடப்படுவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள்வி.எம்.எஸ் சேவையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன் குறித்த சேவை வினைத்திறனாக மேற்கொள்ளப்படுவதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆழ்கடல் பலநாள் மீன்பிடிக் கலங்களுக்கும் பொருத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சேவை சீராக தொழிற்படும் வரை மாதாந்த சேவைக் கட்டணம் அறவிடப்படுவதை இடை நிறுத்துமாறும்தொடர்பிலக்கம் ஒன்றை வழங்கி அதனூடக வி.எம்.எஸ் கருவிகள் செயற்படாத கலங்களின் உரிமையாளர்கள் விபரங்களை தெரிவிப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில்அமைச்சரின் அறிவுறுத்தலை உடனடியாக நடைமுறைப்படுத்;திய கடற்றொழில் திணைக்களம்வி.எம்.எஸ் கருவிகள் தொழிற்படாத மீன்பிடிக் கலங்களின் உரிமையாளரகள்> 0113010031> 0114323389 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக தகல்களை வழங்கினால் அதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரை சேவைக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது எனவும் கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஆழ்கடல் #டக்ளஸ்தேவானந்தா #கடற்றொழில்

ஊடகப் பிரிவு: கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சு

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap