யாழ்.கொடிகாமம் மிருசுவில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மீது இனந்தெரியாத வாள்வெட்டுக் குழு ஒன்றினால் நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் குறித்த நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் வாள்வெட்டுக்கு இலக்கானதுடன், நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வாள், இரும்பு கம்பி மற்றும் கூறிய ஆயுதங்களுடன் வந்திறங்கிய 8 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை அடித்துடைத்துள்ளனர்.
இதன் பின்னர் அங்கிருந்த பணியாளர் ஒருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் கையில் வாள்வெட்டுக்கு இலக்கான நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்த குறித்த கும்பல் அங்கிருந்து பெறுமதிவாய்ந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் உடனடியாகவே கொடிகாமம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட போதும் காவல்துறையினர்அதிகாலை 3 மணியளிவிலேயே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். #மிருசுவில் #தனியார்நிறுவனம் #தாக்குதல் #வாள்வெட்டு
Add Comment