வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை நாளை (14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #வெளிநாடுகளிலிருந்து #இலங்கையர் #நிறுத்தம் #கந்தக்காடு #கொவிட்19
Spread the love
Add Comment