உலகம் பிரதான செய்திகள்

வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை


இணையம் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாக சேரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வேலைவாய்ப்பு மட்டுமின்றி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளைப் பயில சிறந்த இடமாக அமெரிக்கா இருந்து வருவதன் காரணமாக வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது.

சீனா , இந்தியா, தென்கொரியா, சவுதி அரேபியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா செல்கின்றனர்.

தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இணையம் மூலம் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்கக் குடியுரிமைத் துறை கடந்த மாதம் அறிவித்திருந்தது.

அரசின்இந்த முடிவை கடுமையாக எதிர்த்த ஹார்வர்ட் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அத்துடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக ட்ரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் அறிவித்தது.

இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் இணையம் மூலம் பாடம் நடத்தும் பல்கலைக்கழகங்களில் புதிதாகக் கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 9ஆம் திகதிக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்படாமல் உள்ள மாணவர்கள் இணைய வகுப்புகளில் சேர விரும்பினால் அவர்களுக்கு விசா வழங்கப்பட மாட்டாது. அவர்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு அந்நாட்டு குடியுரிமைத் துறை அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மார்ச் 9ஆம் திகதிக்கு முன்னர் கல்வி விசாக்களைப் பெற்ற வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்குத் தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #வெளிநாட்டு  #,மாணவர்கள் #அமெரிக்கா #தடை  #ட்ரம்ப்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap