இந்தியா பிரதான செய்திகள்

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக அமைய இருக்கும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இன்று (ஓகஸ்ட் 5) நடைபெற்றது. இதற்காக டெல்லியிலிருந்து அயோத்தி  சென்ற  பிரதமர் நரேந்தர மோடி  அங்குள்ள அனுமன் கோயில், குழந்தை ராமர் கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர் சுமார் 12.40 மணியளவில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நிகழ்வு  ஆரம்பமானது

 

விழாவுக்கான மேடையில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் சமூக இடைவெளியுடன் அமர்ந்து பூமி பூஜையில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேதங்களை முழங்க ராமர் கோயிலுக்கு  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் . 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல் அடிக்கல்லாக நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு   அனுமதி    வழங்கிய உச்சநீதிமன்றம் அதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.  எனவே, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியதுடன் அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  #ராமர்கோயில்  #அடிக்கல் #அயோத்தி #மோடி

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.