
மயிலிட்டி வடக்கு பகுதியில் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்ட காணி ஒன்றினை துப்பரவு செய்த பொழுது ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி காவல்துறையினா்தெரிவித்தனர்.
காணி உரிமையாளா் பெக்கோ ரக வாகனத்தின் உதவியுடன் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் 3,000 ற்கும் மேற்பட்ட ரி 56 துப்பாக்கியின் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவற்றினை செயலிழக்க வைப்பதற்காக காவல்துறை விசேட அதிரடிப்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாக பாலாலி காவல்துறையினா் தெரிவித்துள்ளனர் #மயிலிட்டி #துப்பாக்கி #ரவைகள் #மீட்பு #மீள்குடியேற்றம்
Spread the love
Add Comment