Home இலங்கைகிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி – ஒருவருக்கு படுகாயம்

கிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் பலி – ஒருவருக்கு படுகாயம்

by admin

கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்ததுடன் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரே விபத்துக்குள்ளாகியதாக தொிவிக்கப்பட்டுள்ளது

வீதி வளைவில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் படுகாயமடைந்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் என்பவா் உயிரிழந்துள்ளதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சர்வநாதன் பவிக்சன் என்பவரே படுகாயமடைந்துள்ளார். அதேவேளை உயிரிழந்த மற்றைய இளைஞன் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுடன் கிளிநொச்சி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #கிளிநொச்சி #விபத்து #இளைஞர்கள் #மோட்டார்சைக்கிள்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More