இலங்கை பிரதான செய்திகள்

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு

வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ள இருவர் சந்தேகத்துக்கு இடமான நிலையில் நடமாடினர் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் மானிப்பாயில் வைத்து நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளின் பின்னர் காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிராக ஆவா என்று காவல்துறையினரால் அழைக்கப்படும் வாள்வெட்டு வன்முறைக் கும்பலின் வன்முறைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் அவர்கள் இருவரும் ஒழுங்காக முற்படுவதால் காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று மானிப்பாய் காவல்துறையினா் தெரிவித்தனர்.

இதேவேளை, மானிப்பாய் பகுதியில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட ஆவா குழுவை சேர்ந்த வினோதன் உள்ளிட்ட ஆறு பேரும் விசாரணைகளின் பின்னர் காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் மானிப்பாய் காவல்துறையினர் கூறினர் #வாள்வெட்டு #மானிப்பாய் #கைது #பிணை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap