இலங்கை பிரதான செய்திகள்

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் முக்கிய தளபதிகள் 110 பேர்…

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், அண்மையில் இந்த விபரத்தை ஐநா வெளியிட்டிருந்தது.

அத்துடன் மே மாதம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக்கொண்டபோதும் “வெள்ளைக் கொடி” சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்றும் இந்த உண்மை மறுக்க முடியாதது என அண்மையில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் ..

ஆதவா ( செயற்பாடு தெரியாது)அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),

அம்பி ( செயற்பாடு தெரியாது)

அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி தளபதி),

ஆர்யன் ( செயற்பாடு தெரியாது)

பேபி சுப்பிரமணியம் (இளங்குமரன் ) ( கல்வித் துறை பொறுப்பாளர்),

பாலச்சந்திரன் பிரபாகரன் ( பிரபாகரனின் இளைய மகன் ),

V.பாலகுமாரன் ( மூத்த உறுப்பினர் )

Lt.Col.அருன்நம்பி ( இம்ரான் பாண்டியன் படை அணியின் தளபதி)

பாலகுமாரின் மகன் தீபன் ( சூரியதீபன் )

பாலதாஸ் ( சிரேஷ்ட உறுப்பினர், நிதித் துறை )

பாரி (வெளியக கணக்காய்வு பொறுப்பாளர்)

பாபு +1 ( நகை விற்பனை பொறுப்பாளர், மனைவியுடன் சரணடைந்ததாக சொல்லப்படுகிறது),

பாபு – இளம்பரிதி (சேரன் வாணிப பொறுப்பாளர் )

பவன் கமில்டன் (கடாபியுடன் இருந்தவர், ஆனால் அங்கவீனமானவர்களை பராமரித்தவர்)

பாஸ்கரன் ( மணலாறு தலைமையக பொறுப்பாளர்)

பாஸ்கரன் ( சொர்ணத்துடன் பனியாற்றியவர், கிளிநொச்சியில் பிறந்தவர் )

Lt.Col.சந்திரன் ( இராணுவ புலனாய்வு)எழிலன் (திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் )

எழில்வாணன் மாஸ்ரர் ( பாடசாலை ஆசிரியர் )

வன பிதா.பிரான்சிஸ் ஜோசப் ( கத்தோலிக்க பாதிரியார் )

கோபி அக்கா (வீரபாண்டியன்) ( ஒரு கையை இழந்தவர், சொத்து மேற்பார்வை)

கரிகரன் ( செயற்பாடு தெரியாது)

இளம்திரையன் (மார்ஷல்) ( இராணுவ பேச்சாளர் )

இளம்பரிதி ( சின்னத்தம்பி மகாலிங்கம்) ( யாழ் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர்)

இளம்பரிதி (மகாலிங்கம் சிவாஜினி) ( இளம்பரிதியின் மனைவி)

இளம்பரிதி – மகாலிங்கம் மகிழினி ( 10 வயது )

இளம்பரிதி – மகாலிங்கம் தமிழொளி (8 வயது)

இளம்பரிதி – மகாலிங்கம் எழிலினி (3 வயது)

இளம்குமரன் (மணலாறு, கட்டளை அதிகாரி )

இளவேங்கை மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

இன்தமிழ் ( செயற்பாடு தெரியாது)

இரும்பொறை மாஸ்டர் ( சினைப்பர் அணி பொறுப்பாளர்)

இசைபிரியா ( ஊடக பிரிவு)

ஜவான் ( புலிகளின் குரல் வானொலி)

ஜெயராஜ் ( நிதிப் பிரிவு )

காந்தி ( புலனாய்வு பிரிவு, சிறைப் பொறுப்பாளர்)

கண்ணன் (அரசியல் பிரிவு, மாணவர் அமைப்பு பொறுப்பாளர்)

கங்கன்/ கனகன் ( லோகநாதன் அருணாசலம் ) (அரசியல் பிரிவு, பாதுகாப்பு)

கரிகாலன் ( முன்னாள் கிழக்கு மாகாண அரசியல் துறை பொறுப்பாளர்)

கருவண்ணன் ( மா வீரர் பணிமனை வாகன பொறுப்பாளர் )

கினி ( யோகியின் உதவியாளர், முரண்பாட்டு ஆய்வு நிறுவன பிரதிப் பொறுப்பாளர்)

கிருபா மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

குயிலன் ( இராணுவ புலனாய்வு)

குமரன் ( பால்ராஜின் மைத்துனர்)

குணம் ( சிரேஷ்ட படைத் தளபதி , அனேகமாக திருகோணமலையின் முன்னாள் தளபதி)

குட்டி (பாண்டியன் வாணிப பொறுப்பாளர்)

லோரன்ஸ் ( வவுனியா மாவட்ட கட்டளை அதிகாரி )

மாதவன் ( காவல் துறை பிரதி பொறுப்பாளர் )

மஜீத் ( இராணுவ புலனாய்வு- நிர்வாக அதிகாரி )

மலரவன் (நிர்வாக சேவை )

மனோஜ் ( ஏற்பாடுகள் – ரூபனின் பிரதி)

மணியரசன் ( சிரேஷ்ட இராணுவ தளபதி)

மாது ( திருகோணமலை இராணுவ பிரிவு )

மிரேஷ் ( நிதர்சனம் தொலைக்காட்சி )

மோகன் அங்கிள் (கடற்புலிகள் )

முகிலன் (இராணுவ புலனாய்வு)

முகுந்தன்/ஐந்து ஒன்பது=code ( வட போர் முனையில் தீபனின் பிரதி )

தி நடேசன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)

நாகேஷ் ( ஒரு கால் இல்லை, நிர்வாக பிரிவு பொறுப்பாளர் )

நளாயினி ( பொறுப்பாளர், ஆங்கில கல்லூரி )

நளாயினி /நளாகினி (மாலதி படைப்பிரிவு )

நேயன் (புலனாய்வு)

நீதன் ( தலைமையக பொறுப்பாளர், சொந்த இடம் திருகோணமலை )

நிலவழகி (மருத்துவ பிரிவு மருத்துவர், இரு குழந்தைகளின் தாய்

நிஷாந்தன் (கடாபியுடன் இருந்தவர், பின்னர் அங்கவீனமானவர்களை பராமரித்தார்)

நிஷாந்தன் மாஸ்டர் (இராணுவ விநியோகம் )

பஞ்சன் புலனாய்வு

மகாதேவன் ஞானகரன் (முக்கியஸ்தர்களில் ஒருவர் )

பரா ராதா ( நீதித் துறை பொறுப்பாளர்)

Dr.பத்மலோஜானி (கரிகாலனின் மனைவி, மருத்துவ பிரிவு)

Lt.Col.பிரபா (புலனாய்வு பிரிவு)

பூவண்ணன் (நிர்வாக பிரிவு பொறுப்பு)

பூவண்ணன் மாஸ்டர் ( செயற்பாடு தெரியாது)

பிரியன் (சுவாமிநாதர் தயாசிறி) ( நிர்வாகத்துறை பிரதி)

புலித்தேவன் (சமாதான செயலகம்)

புலிமைந்தன் (யோகியின் சாரதி)

புரச்சிகா (அம்பியுடன் கூட இருந்தவர், மேலே பார்க்க )

புரட்சி மாஸ்டர் (ஆர். பி.ஜி சினைப்பர் பிரிவு)

ரூபன் ( ஏற்பாடுகள் பொறுப்பாளர்)

ராகுலன் (யாழ்ப்பாண படைப்பிரிவு பிரதி )

ராஜா ( விளையாட்டு துறை, பாப்பாவின் பிரதி, 4 பிள்ளைகளுடன் காணவில்லை)

புதுவை இரத்தினதுரை ( கவிஞர், கலை மற்றும் கலாசார பொறுப்பாளர்)

Col.ரமேஸ் (இளங்கோ) ( காவல் துறை)

Col.ரமேஸ்(சிரேஷ்ட இராணுவ தளபதி)

ரேகா மகேந்திரராஜா ( மருத்துவ பிரிவு பொறுப்பாளர்)

ரஜித்தன் (மணலாறு மாவட்டம் )

ரூபன் ( யாழ்ப்பாண படைப்பிரிவு 3 ஆவது பொறுப்பாளர்)

S.தங்கன் (சுதா ) சோமசுந்தரம் சுதாகரன் (அரசியல் துறை பிரதி)

சக்தி (வனப் பிரிவு ஒரின்கினைப்பாளர்)

சத்யன் ( வளப் பாதுகாப்பாளர்)

செல்வராசா (யாழ் மாவட்ட தளபதி )

சிலம்பன் (ராதா விமான எதிர்ப்பு பொறுப்பாளர்)

சின்னவன் (புலனாய்வு)

சித்திரங்கன் (மணலாறு மாவட்டத்துக்கான தளபதி)

Lt.Col.சுடரவன் (இராணுவ புலனாய்வு)

Lt.Col.தணிகையரசு (இம்ரான் பாண்டியன் படைப் பிரிவு)

திலக் (திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி செயலக பொறுப்பாளர்)

திலகர் (நிதிப் பிரிவு,விவசாயம், பண்ணைகளை கவனித்து வந்தார் )

துவாரகன் வயிரவமூர்த்தி (மாவீரர் துயிலும் இல்லம் மன்னார்)

வாகிசன் (ராமநாதன் நிமலநாதன்) ( செயற்பாடு தெரியாது)

வீரதேவன் (மகாலிங்கம் ஜெயகாந்தன்) (வங்கிகள் பொறுப்பாளர்)

Lt.Col.வைதி (இராணுவ புலனாய்வு)

Lt.Col.வள்ளுவன் மாஸ்டர் (ராதா விமான எதிர்ப்பு பிரிவு)

வேலவன் (சிரேஷ்ட தளபதி, இம்ரான் பாண்டியன் படை அணி)

வேல்மாறன் (கேணல் பிரபாவின் பாதுகாப்பாளர்)

வினிதா (நடேசனின் மனைவி )

வீமன் (கட்டளை தளபதி)

விபுலேந்திரன் (நிதிப் பிரிவு)

யோகன் / சேமணன் (அரசியல் துறை)யோகி (முரண்பாட்டு ஆய்வு நிறுவன பொறுப்பாளர்)

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap