இலங்கை பிரதான செய்திகள்

புதிய அரசியலமைப்பு – நிபுணர் குழு வில் DR. A. சர்வேஸ்வரன் – பேராசிரியர் நஜீமா கமுறுடீன்…


புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.


இந்த நிபுணர் குழுவில் கலாநிதி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் பேராசிரியை நஜீமா கமுறுடீன் ஆகியோர் இணைக்கப்பட்டு 9 பேர் அடங்கிய நிபுணர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி. அருளாநந்தம் சர்வேஸ்வரன் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவிரையாளர். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை ஆய்வகத்தின் பணிப்பாளராகவும், சூழலியல், தொழில்சார் சட்டம் உள்ளிட்ட பல்துறை சட்ட நிபுணராக விளங்குகிறார்.


இவரது பின்னணி குறித்து https://www.teachenvirolaw.asia/ இப்படிக் கூறுகிறது.
Profile


Background
LL.B (Hons), M.A (UN – UPEACE) (Costa Rica), M.Phil (Colombo), Attorney – at – Law, ALFP Fellow (Japan)
Senior Lecturer, Faculty of Law, University of Colombo
Director, Legal Research Unit, Faculty of Law, University of Colombo
Mr.A.Sarveswaran, is a Senior Lecturer at Department of Private and Comparative Law, Faculty of Law, University of Colombo. In addition, he functions as the Director of the Legal Research Unit, Faculty of Law, University of Colombo. He teaches Environmental Law at undergraduate level for Bachelor of Laws (LLB) Program and at postgraduate level for Masters in Laws (LLM) Program at the Faculty. The LLM Program has been introduced in the Faculty for 2015/2016 Academic Year for the first time. He is a Visiting Lecturer in Environmental Law at University of Jaffna and Open University of Sri Lanka. He teaches Environmental Law as part of the Masters in Science (MSc) Program at University of Colombo and Masters in Environmental Management Program (MEM) and Masters in Regional Development Program (MRDP) at Faculty of Graduate Studies, University of Colombo. He also teaches Course Modules in Sustainable Development and Peace, and Environmental Conflicts and Peace for Postgraduate Diploma in Conflict and Peace Studies Program at Faculty of Graduate Studies, University of Colombo. He has participated in the Train – the – Trainers Program conducted by the ADB-IUCN in teaching Environmental Law. He participates as a Resource Person in Workshops organized by the IUCN – Sri Lanka, Human Rights Commission of Sri Lanka and other Organizations. He was a Senior Consultant to the Law Review Project of the Human Rights Commission of Sri Lanka. He is an External Collaborator of the International Labour Organization (ILO). He has received the Environmental Law Champion of Asia Award from the Asian Development Bank. He is an Asia Leadership Fellow (ALFP) of the International House of Japan.


குறித்த குழுவினர் இலங்கையில் வாழுகின்ற பல்லின சமூகங்களினதும் அபிலாசைகளையும் காலாச்சார பண்பாடுகளையும் கருத்திலெடுத்து நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு உகந்த அரசியலமைப்பை உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை குறித்த குழுவிற்கான நிபுணர்களை நியமிப்பது தொடர்பில் நேற்று (02.09.20) இடம்பெற்ற அமைச்சரவையில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் நிபுணர் குழுவில் தமிழ் – முஸ்லீம் மக்களின் உணர்வுகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையில் நிபுணர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap